கரோனா பொது முடக்க தளர்வுகளை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பக்ரீத் திருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திகொள்ளவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டது.
அதன்படி, பக்ரீத் திருநாளையொட்டி புதுச்சேரி ஈத்கா மசூதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகைகளில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் நடைபெற்ற இத்தொழுகையில் பங்கேற்றவர்களுக்கு, முன்னதாக உடல் வெப்ப சோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம், தனிமனித இடைவெளியுடன் நடந்த பக்ரீத் தொழுகை தியாகத்தை நினைவு கூரும் வகையிலும், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றும் நிகழ்வாகவும், பக்ரீத் திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தளர்வுகள் அறிவிப்பு