எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராம்ஷேவா இயக்கும் படம் 'என்னை சுடும் பனி'. இப்படத்தில் சிஐடி அதிகாரி கதாப்பாத்திரத்தில் பாக்யராஜ் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
'எனை சுடும் பனி' படப்பிடிப்பு தொடக்கம்: சிஐடி அதிகாரியாக பாக்யராஜ்! - ennai sudum pani
இயக்குநர் பாக்யராஜ் சிஐடி அதிகாரியாக நடிக்கும் 'எனை சுடும் பனி' படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது.
'எனை சுடும் பனி' படப்பிடிப்பு தொடக்கம்
இப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இப்படம் குறித்து இயக்குநர் ராம்ஷேவா கூறுகையில், " ஒரு காதல் ஜோடிக்கு இடையில் நடக்கும் கிரைம் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா,பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது" என தெரிவித்தார்.