ஆயில் இந்தியா லிமிடெட் தங்கள் எண்ணெய் கிணறு வெடித்தது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓஐஎல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட மற்ற குத்தகைதாரர்கள் சம்பவ இடத்தில் இருக்கிறார்கள். நஷ்ட ஈடுக்கான மதிப்பீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டின்சுகியா மற்றும் டூம்டூமா பகுதிகளில் இதற்கான பணி நடைபெறுகிறது. ஜூலை 22ஆம் தேதிவரை இப்பகுதியில் மொத்தம் 1906 குடும்பங்கள் வசித்துவந்தனர்.
பக்ஜன் எண்ணெய் கிணறு வெடிப்பு - சேத மதிப்பீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
திஸ்பூர்: பக்ஜன் எண்ணெய் கிணறு வெடித்ததினால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எண்ணெய் கிணற்றை மூடுவதற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் நடைபெறும். நெருப்பை அணைப்பதற்கான பணிகள் அதன்பிறகுதான் வேகமெடுக்கும். சுற்றுச்சூழலை கண்காணிக்கும் பணிகள் ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது எண்ணெய் கிணறை மூடுவதற்கு சூழல் ஏதுவாக உள்ளது. காற்றின் தரம் மற்றும் ஒலி மாசின் அளவுகள் கணக்கிடப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளது.
கடந்த மே 27ஆம் தேதி பக்ஜன் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட வெடிப்பு, ஜூன் 9ஆம் தேதி முதல் பற்றி எரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.