குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தம்பதிக்குத் திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைப் பிறந்துள்ளது. அவர்களுக்குப் பிறந்த குழந்தை வினோதமாக மூன்று கால்களுடன் பிறந்ததால் பெற்றோர்கள் பதற்றமடைந்தனர்.
மூன்று காலுடன் பிறந்த வினோதக் குழந்தை - வெற்றிகரமாக மூன்றாவது கால் நீக்கம் - ahmedabad
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையின் மூன்றாவது கால் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் மூன்றாவது காலை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர் முடிவு செய்யப்பட்டது. அதன்படி குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்தாவது நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையில் குழந்தையின் மூன்றாவது கால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மேலும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.