உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாபா ராம்தேவ், "இந்தியாவின் மக்கள் தொகை குறைப்பதற்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க வேண்டும். எந்த மதத்தினை சார்ந்தவராக இருந்தாலும் இதனை நடைமுறை படுத்தினால் இந்தியாவின் பிரச்னையை தீர்க்க முக்கிய பங்காற்றும். அரசு இதற்காக தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மூன்றாவது குழந்தை குறித்து ராம்தேவ் மீண்டும் சர்ச்சை பேச்சு
டேராடூன்: "இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க வேண்டும்" என்று, பாபா ராம்தேவ் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
baba ramdev
இந்தியா அதன் மக்கள் தொகை குறைப்பதற்கு தயாராக இல்லை. மாட்டு இறைச்சி, சாராயம் ஆகியவற்றை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் வன்முறையை குறைக்க முடியும்" என்றார். சர்ச்சைகளின் நாயகனாக இருந்து வரும் பாபா ராம்தேவ், தற்போது மற்றொரு கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.