மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் அசாம் கான், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து கருத்துகளை தெரிவித்தார்.
நான் பிரதமராக இருந்தால் புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நொடியே பதிலடி கொடுத்திருப்பேன் - அசாம் கான்
லக்னோ: நான் பிரதமராக இருந்தால் புல்வாமா தாக்குதல் நடந்த 40 நொடியிலே பதிலடி கொடுத்திருப்பேன் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் பிரதமராக இருந்தால் புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நொடியே பதிலடி கொடுத்திருப்பேன்- அசாம் கான்
புல்வாமா தாக்குதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அசாம் கான், புல்வாமா தாக்குதலின் போது தான் பிரதமராக இருந்தால் தாக்குதல் நடந்த 40 நொடிகளிலேயே பாகிஸ்தானுக்கு உரிய விதத்தில் பதிலடி கொடுத்திருப்பேன் எனக் கூறினார்.
அதற்கு பிறகு நடக்கும் விளைவுகளைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டேன் எனவும் கூறினார். அசாம் கான் மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.