டெல்லி: வாழும் கலை நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், அயோத்தி வழக்கின்போது சமாதான குழுவில் இடம்பெற்றிருந்தார். அதற்காக அவர் முயற்சிகளும் எடுத்தார். எனினும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் அவருக்கு அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின் போது அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
70 ஆண்டுகளாக நீடித்த அயோத்தி வழிபாட்டு தலம் தொடர்பான பிரச்னையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி முடித்துவைத்தது.
இதையடுத்து இன்று (ஆக.5) அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்பும் பணிகள் இன்று தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: தகவல்கள் உடனுக்குடன்...!