அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட ஐந்து நீதிபதிகளும் நவம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
அதில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுவதாகவும், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே, அயோத்தியில் ராமர், சீதை வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி அந்த நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது. மேலும் அங்கு ராமர் கோயில் கட்ட 3 மாதத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்காக, பூஜை செய்யப்பட்டு செங்கற்கள் இந்தியாவின் அணைத்து பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் ராசுலாபாத் என்ற இடத்தில் இருந்து 51,000 செங்கற்களை அனுப்பிவைக்க அங்குள்ள செங்கல் சூளை முதலாளி ஒருவர் முடிவெடுத்துள்ளார்.