அயோத்தி நிலத்தை சரிசமமாக பங்கீட வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் இது தொடர்பான மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தனர்.
அயோத்தி வழக்கு 17ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் - அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு
டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் வாதங்கள் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ayodhya case
இந்நிலையில், அயோத்தி நிலம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 18ஆம் தேதி அயோத்தி தொடர்பான வாதங்கள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தியா வழக்குக்கு முன்னுரிமை; காஷ்மீர் வழக்குக்கு பின்னடைவு!