புதுச்சேரியில் கரோனா நோய்த் தடுப்பு குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் ஊரடங்கை மதிக்கின்றனர். ஆனால், சில இடங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் கரோனா நோய் குறித்து முதலில் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் சாலை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரி வடக்கு பிரிவு காவல் துறையினர் கலந்துகொண்டனர். அப்போது காவலர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து, நோய்த் தொற்று ஏற்படாமல் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்றும், பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் மருத்துவர்கள் காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் காவல் துறை கண்காணிப்பாளர் மாறன், ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோவிட்19 பாதிப்பு அதிகரிப்பு: ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்?