தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்வியில் அரசியலைக் கலக்க வேண்டாம் - இந்தியாவுக்கு சீனா பதில் - சீன மொழிக் கல்வி இந்தியா

டெல்லி: சீனக் கல்வி நிறுவனத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் விவகாரத்தில் இந்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம் என அந்நாடு கோரிக்கை வைத்துள்ளது.

China
China

By

Published : Aug 4, 2020, 9:49 PM IST

சீனாவின் கான்பூசியஸ் கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கும் மொழிசார் படிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவிவரும் நிலையில் இந்தியாவில் சீனாவின் மறைமுக ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சீனாவின் கான்பூசியஸ் கல்வி நிறுவனம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியா - சீனா நாடுகளின் கூட்டு நடவடிக்கையாக இந்தக் கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில், பரஸ்பர மரியாதை, நட்பு, சமத்துவம், உதவி உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த திட்டமானது செயல்பட்டுவருகிறது.

பல ஆண்டுகளாக இந்தியாவில் சீன மொழி கற்பித்தல், கலாசார பரிமாற்றம் ஆகியவற்றை இந்தத் திட்டம் உறுதி செய்துவருகிறது. எனவே இந்தத் திட்டத்தில் அரசியல் நோக்குடன் பார்ப்பதை இந்திய அரசு தவிர்த்துக்கொண்டு, இந்தியா - சீனா உறவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கல்வித்துறையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா முயற்சி

ABOUT THE AUTHOR

...view details