பீம் ஆர்மி அமைப்பின் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞமான பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், பட்டியலினத்தவர்கள் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்வி கேட்கும்போது நசுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா மற்றும் அது சார்ந்த அமைப்புகள் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்து வருவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் அதிகரிப்பு - பிரசாந்த் பூஷண் பாய்ச்சல் - பகுஜன் சமாஜ் கட்சி
டெல்லி: பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளரும் வழங்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலினத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கண்மூடித்தனமாக அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த அடக்குமுறைக்கு எதிராக பட்டியலினத்தவர்களின் பிரதிநிதியாக விளங்கும் பகுஜன் சமாஜ் கட்சி கேள்வியெழுப்பும்போது, அதனை இந்த அரசுகள் கட்டுப்படுத்தி அக்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பட்டியலினத்தவர்களுக்கு ஆதரவாக சந்திரசேகர் ஆசாத் தொடங்கிய பீம் ஆர்மி அமைப்பை உத்தரப் பிரதேச அரசும் மத்திய அரசும் சேர்ந்து நசுக்கி அழிக்கப்பார்ப்பதாகவும் பிரசாந்த் பூஷண் குற்றஞ்சாட்டினார். சந்திரசேகர் ஆசாத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.