தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்த தடுப்பூசி மருந்தும் இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது - அதிபர் ட்ரம்ப் - அமெரிக்கா கொரோனா வைரஸ்

வாஷிங்டன் : அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனாவுக்கு எதிரான ’அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசி மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

vaccine
vaccine

By

Published : Sep 1, 2020, 6:52 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் சோதனைக் கட்டத்தில் உள்ளன. கரோனா தொற்று மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ’அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசி மருந்து பரிசோதனையின் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், “அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை எட்டியுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றியின் விழும்பில் கரோனா தடுப்பூசி மருத்துகள் உள்ளன.

ஏற்கனவே, மாடர்னா இன்க், ஃபைசர் இன்க் ஆகிய நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்க வழக்கமாக பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், தமது நிர்வாகம் சில மாதங்களிலேயே அதை சாதித்து விட்டது. அதிபர் தேர்தலுக்கு முன்னர் கரோனா தடுப்பூசி செயல்பாட்டுகள் வந்துவிடும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 80 இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்தத் தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details