அரசுப் பொது மருத்துவமனையின் உள்ள குறைகளைக் கண்டறிய புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவை சார்ந்த ஏழு சட்டப்பேரவை உறுப்பினர்கள்,குழுவின் தலைவரும் அதிமுக கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில் இன்று ஆய்வு செய்தனர்.
பின்பு மருத்துவமனை வளாகத்தில் மதிப்பீட்டுக் குழுவினருடன் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர், சுகாதார துறை அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இக்குழவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயமுர்த்தி, விஜயவேனி, கீதா ஆனந்தன், வெங்கடேசன், அசானா, சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.