அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகிறது. பல நாட்களாக இந்தத் தோட்டத்தில் ஒரு மலைப்பாம்பு சுற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தேயிலை தோட்டத்தில் ராட்சச மலைப்பாம்பு! - வனத்துறை
திஸ்பூர்: நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 14 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
python
அதையடுத்து, வனத்துறையினர் உதவியோடு அங்கு பணி செய்யும் தேயிலை தோட்டப் பணியாளர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். 14 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உயிரோடு பிடிக்கப்பட்டது. சுமார் 35 கிலோ எடையுடன் கண்டெடுக்கப்பட்ட இந்த மலைப்பாம்பை, அருகில் இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.