தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசி முன்னிலை ! - AIMIM

ஹைதராபாத்: ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஓவைசி

By

Published : May 23, 2019, 1:56 PM IST

தெலங்கானா மாநிலம் தனியாக உருவானதையடுத்து அம்மாநிலம் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவே ஆகும். 19 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில், ஹைதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் பகவன்த் ராவ் களம் இறக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது, வெளிவரும் தகவலின்படி, இரண்டு லட்சத்து 73 ஆயிரத்துற்கும் அதிகமான வாக்குகளை ஓவைசி பெற்றுள்ளார்.

பாஜகவின் ராவ் ஒரு லட்சத்து 78 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். அதே சமயம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர் ஸ்ரீ காந்த 38 ஆயிரத்து 500 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியில் ஓவைசி வெற்றி வாகை சூடியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓவைசி தொடர்ந்து இம்முறையில் வெற்றிபெற உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details