மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இதன் மூலம் மோடி இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடியுடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.
புதிய அமைச்சரவையில் இடம் வேண்டாம்: அருண் ஜேட்லி கடிதம்
டெல்லி: புதிய அமைச்சரவையில் தனக்கு இடம் வேண்டாம் என அருண் ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அருண் ஜெட்லி
இந்நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையில் தொடர விரும்பவில்லை. ஓய்வெடுக்க விரும்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.