முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் அருண் ஜேட்லி செய்த மாற்றங்கள் பற்றி ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டில், '' ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாக வாட் வரி, கலால் வரி, மத்திய விற்பனை வரி, அதன் விளைவு ஆகியவற்றின் காரணமாக பல நேரங்களில் வரி விகிதத்தின் அளவு 31 சதவிகிதமாக இருந்தது.
ஜிஎஸ்டி வரி விகிதம் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோருக்கு உகந்ததாக உள்ளது. ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்தின் உயர் வரி விகிதங்கள் வரி செலுத்துவதற்கு ஊக்கமளிப்பதாக செயல்பட்டாலும், ஜிஎஸ்டியின் கீழ் குறைந்த விகிதங்கள் வரி இணக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 1.24 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விகிதங்களை வசூலிப்பதால் பெரும் இணக்க செலவுகளுக்கு வழிவகுத்தது.
மக்கள் வரி செலுத்த வேண்டிய விகிதத்தை ஜிஎஸ்டி வரி முறை குறைத்துள்ளது. ஆர்என்ஆர் குழுவின் படி, வருவாய் நடுநிலை விகிதம் 15.3 சதவீதமாக இருந்தது. இதனை ஒப்பிட்டால் தற்போதைய ஜிஎஸ்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி 11.6 சதவிகிதமாகவே உள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் அருண் ஜேட்லி'' என பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க:'பாஜகவுடன் தொடர்பு?' - ராகுல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார்... மூத்தத் தலைவர்கள் பதிலடி!