டெல்லி:முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுநாளையொட்டி தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இது குறித்து பதிவிட்டிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “எனது நண்பரான அருண் ஜேட்லியின் நினைவுநாளில் எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஜேட்லி ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். பல்வேறு திறன்களுடன் நாட்டிற்காகப் பணியாற்றினார்” என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “எனது நல்ல நண்பனை இழந்து தவித்துவருகிறேன். நாட்டிற்கு மிகுந்த ஊக்கத்துடன் சேவையாற்றிய நுண்ணறிவாளர், சிறந்த பண்பாளர்” எனப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
"அருண் ஜேட்லி ஒரு சிறந்த அரசியல்வாதி, நல்ல சொற்பொழிவாளர். இந்திய அரசியலின் இணையற்ற ஒரு சிறந்த மனிதர். அவர் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நண்பர்களின் நண்பர். அவரது உயர்ந்த மரபு, நாட்டின் மீது பக்தி ஆகியவற்றால் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.