ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே அவ்வப்போது கோஷ்டி மோதல் ஏற்படுவது வாடிக்கை.
அடித்து மாய்ந்துகொண்ட கல்லூரி மாணவர்கள்; வைரலாகும் ஷாக்கிங் வீடியோ! - தாக்கிக் கொள்ளும் வீடியோ
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
Anantpur
இந்நிலையில், கல்லூரி முடிந்த பிறகு நேற்று ஒரு கோஷ்டியைச் சேர்ந்த சிவய்யாவை மற்றொரு கோஷ்டியினர் ஒன்று சேர்ந்து மைதானத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவர் கோமாவில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.