உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் களமிறக்கப்படுகிறார்.
‘யோகி ஆதித்யநாத் கைது செய்யப்பட வேண்டும்’ - ஒவைசி வேண்டுகோள்! - ஒவைசி
ஹைதராபாத்: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திட வேண்டும் என ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவருக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரும், இம்ரான் மசூத்தும் உறவினர்கள் என பொய்யான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், "இஸ்லாம் பெயர் வைத்திருப்பதால் மட்டுமே இருவரும் உறவினர்கள் என யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது மதரீதியான வன்முறைகளுக்கு வழி வகுக்கும் என்றும், அவர் மீது 153 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும்" என, அசாதுதின் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.