தமிழ்நாடு

tamil nadu

எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து ஆலோசனை

By

Published : May 30, 2020, 2:35 AM IST

டெல்லி: லடாக்கில் சீனாவால் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கான மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டது.

பாதுகாப்பு படை வீரர்கள்
பாதுகாப்பு படை வீரர்கள்

பாதுகாப்புப் படை வீரர்களுக்கான மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால், கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, அப்போது ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக, இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்து, முதல் கட்டமாக மே 27-29 ஆம் தேதிகள் வரை, இம்மாநாடு நடைபெற்றது.

மூன்றாவது நாளான நேற்று லடாக், சிக்கிம் மாநிலங்களில் சீனா பாதுகாப்புப் படையால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கிழக்கு லடாக் உள்ளிட்ட நான்கு பகுதிகளில்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்னை உள்ளது என்றும்; பாங்காங் ஏரியில் மே 5,6ஆம் தேதிகளில் இரு நாடுகளின் படைவீரர்களுக்கும் இடையே ஏற்பட்டத் தாக்குதல் காரணமாகத்தான் தற்போதும் லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது எனவும் பாதுகாப்புப் படை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டாம் கட்ட மாநாடு ஜுன் 24 - 27ஆம் தேதிகள் வரை நடைபெறும் என்றும்; அதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details