மக்களவைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மீண்டும் இணை அமைச்சரானார் அர்ஜூன் ராம் மேக்வால்! - minister
டெல்லி: கடந்த முறை மத்திய இணை அமைச்சராக பதவி வகித்த அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மீண்டும் இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அர்ஜூன் ராம் மேக்வால்
இந்நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் தொடர்ந்து பதவியேற்று வருகின்றனர். அந்த வரிசையில், கடந்த முறை நீர்வளத்துறையின் மத்திய இணை அமைச்சராக இருந்த அர்ஜூன் ராம் மேக்வால், இம்முறையும் இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.