தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சேவைகளுக்காக சிறப்பு ரயில் ’அர்ஜூன்’ அறிமுகம் - சிறப்பு ரயில் ’அர்ஜூன்’ அறிமுகம்

பர்கானாஸ்: கரோனா வைரஸ் பெருந்தொற்றின் இடர்காலத்தில் அவசர சேவைகளுக்காக சிறப்பு ரயில் ’அர்ஜூன்’ அறிமுகப்படுத்தப்பட்டது.

Eastern Railway runs 'Arjun' train for medical staff
Eastern Railway runs 'Arjun' train for medical staff

By

Published : Mar 30, 2020, 12:52 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசு சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக அர்ஜூன் என்ற பெயரில் ரயில் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவு தலைமையின் கீழ் இரண்டு ஈ.எம்.யூ பயிற்சியாளர்களைக் கொண்ட இந்த ரயிலின் சேவை சனிக்கிழமை முதல் தொடங்கியது.

குறிப்பாக, இது மருத்துவ ஊழியர்களுக்கான சிறப்பு ரயிலாக செயல்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்தவும், பிற சுகாதார பணியாளர்களின் தேவைக்காகவும் இயக்கப்படுவதாக ரயில்வே அலுவலர் நாகேந்திர குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றாவிட்டால் பேரபாயம் - அரவிந்த் கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details