நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாகி இருக்கின்றன. இதற்காக தேசிய அளவில் ஒருங்கிணைந்திருக்கும் எதிர்க்கட்சிகள், மாநாடு நடத்துவது, ஆலோசனை நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துவது என பாஜகவுக்கு பீதியை கிளப்பி கொண்டிருக்கின்றன.
'+2 படித்தவரை பிரதமராக தேர்ந்தெடுக்காதீர்!' - நரேந்திர மோடி
டெல்லி: 12-ம் வகுப்பு படித்தவரை பிரதமராக தேர்ந்தெடுக்காதீர்கள் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வகையில், டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பேரணி நடத்தின. இந்த பேரணியில், முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, திமுக எம்.பி., கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ரஃபேல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மோடி, மக்கள் முன் கூற வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை கூற கடமை அவருக்கு இருக்கிறது என்றார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். கடந்த முறை போல் 12-ம் வகுப்பு படித்தவரை இந்த முறையும் பிரதமராக்காதீர்கள். படித்தவரை பிரதமராக தேர்ந்தெடுங்கள் என்றும் பேசினார்.