தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆப்பிள் கேம்ஸ்: சீன பயனர்களுக்கு இனி அப்டேட் கிடையாது!

சீன அரசின் விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவில் பயனர்கள் பயன்படுத்திவரும் ஆப்பிள் கேம்ஸ் எனும் இணைய விளையாட்டு செயலியை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து புதுப்பிக்கும் முயற்சியை நிறுவனம் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

apple games
apple games

By

Published : Jul 3, 2020, 1:06 PM IST

சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் ஆப்பிள் கேம்ஸ் செயலியையும், இதர விளையாட்டுக்களையும் சீன அரசின் நெருக்கடியால், அதனை புதுப்பிக்கும் முயற்சியை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்:

  • ஆப்பிள் நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான வருவாய் ஈட்டும் விளையாட்டுகள் அடங்கும்.
  • உலகின் மிகப் பெரிய இணைய விளையாட்டு சந்தையை சீனா தன் வசம் வைத்துள்ளது.
  • ஆண்டுக்கு இதன் வியாபார மதிப்பு 16.4 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 15.4 பில்லியன் டாலர் தான்.
  • தற்போதைய சூழலில் சீனர்களுக்கு 60ஆயிரம் விளையாட்டுக்களை ஆப்பிள் நிறுவனம் வழங்கிவருகிறது
  • தனது விளையாட்டு தயாரிப்பாளர்களிடம், ஜூன் 30 முதல் விளையாட்டுகளை வெளியிட சீன அரசின் அனுமதியை பெறுவது அவசியம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • மொத்த ஆப்பிள் நிறுவனத்தின் விளையாட்டு வருவாயில், சீனாவின் பங்கு மட்டும் 53 விழுக்காடு என வாயை பிளக்க வைக்கிறது.

இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்

ABOUT THE AUTHOR

...view details