கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துக் கல்வி நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.
ஆந்திராவிலும் ஆல்பாஸ் ஆன பத்தாம் வகுப்பு மாணவர்கள் - அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடல்
அமராவதி: ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மாணவர்களின் நலன்கருதி தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்தன. உச்ச நீதிமன்றமும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அந்தந்த மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் அடிமுலாபு சுரேஷ், கரோனா வைரஸின் எதிரொலியாலும், மாணவர்களின் நலன் கருதியும் மாநிலத்தில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாகவும் இன்று (ஜூலை 20) அறிவித்தார்.