கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் அனைவரும் சுயசார்பு பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்கள் எழுப்பி வரும் நிலையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் விளக்கமளித்துள்ளார்.
அதில், ''உள்ளூர் பொருள்களை வாங்குவதற்கு எவ்வித உத்தரவுகளோ, வழிகாட்டுதல்களோ இருக்கப்போவதில்லை. ஆனால், மக்கள் தரமானப் பொருள்கள் வாங்குவதற்காக அறிவுறுத்தப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் பொருள்கள் என்பது உள்ளூர் நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டும் கூறவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் ஆலை வைத்து, இந்தியாவில் உற்பத்தி செய்தால், அதுவும் உள்ளூர் பொருள்களாகவே பார்க்கப்படும்.
உள்ளூர் தயாரிப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எந்தப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அப்பொருள்கள் மீது எவ்வித வேறுபாடுகளும் காட்டப்படாது. மக்களுக்கும் நீங்கள் இதனை மட்டும் தான் வாங்க வேண்டும், இதனை வாங்கக் கூடாது என எவ்வித வழிகாட்டுதல்களும் இருக்காது.