உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 32 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
அதாவது, மாணவர்களுக்கு வெறும் ஒரு கிலோ அரசி மற்றும் 400 கிராம் பால் மட்டுமே வழங்கியுள்ளனர். அதுவும் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் ரொட்டியும், தொட்டுக் கொள்ள உப்பும் வழங்கப்பட்டுள்ளது.