மும்பையில் வசித்துவந்தவர் பென்னட் ரெபல்லோ (59). இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியை செய்துவந்தார். இவரை கடந்த சில நாள்களாகக் காணவில்லை.
இந்த நிலையில் இவரின் உடலின் பாகங்கள் மும்பையில் உள்ள மித்தாய் நதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரை கொன்று உடலைத் துண்டுதுண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து வைத்து ஒரு பாகத்தை நதியில் வீசியுள்ளனர்.
இதனை மீனவர்கள் உதவியுடன் காவலர்கள் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் மும்பையில் இதுபோன்று இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பெண் ஒருவரை அவரின் தந்தையே அடித்துக் கொன்றார்.
உடலை சூட்கேஸில் எடுத்து மறைக்க முயன்றபோது அவரை காவலர்கள் கைது செய்தனர். தனது மகள் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தான் எவ்வளவு எடுத்துக் கூறியும் காதலை கைவிட மறுத்ததால் கொன்றதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சிறுத்தையின் பிடியில் நாய்: பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!