தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத். ஏழு மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுக்கு கிராமத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவரைத் இவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பிரசாத் வரலட்சுமியுடன் ஹைதாபாத்தில் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதேபோன்று, சமீபத்தில் நடந்த சண்டையில் கணவரிடம் கோபித்துக்கொண்டு வரலட்சுமி தாய் வீட்டிற்குச் சென்றார். இதனிடையே, வரலட்சுமியைத் தேடி தனுக்கு கிராமம் வந்த பிரசாத் மனைவியை வீட்டுக்குத் திரும்பி அனுப்பிவைக்குமாறு மாமியிடம் தகராறு செய்துள்ளார்.