தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒப்புகைச் சீட்டு இயந்திரம் மூலம் வாக்கு எண்ணுங்கள்..!' - நாயுடு பரிந்துரை - வாக்கு எண்ணணுதல்

டெல்லி: ஒப்புகைச்சீட்டு இயந்திரம் கொண்டு வாக்கு எண்ண வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.

andra cm

By

Published : May 18, 2019, 4:52 PM IST

தேர்தலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது குறித்து, டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், "ஒவ்வொரு தொகுதிக்கும் ஏதேனும் ஐந்து ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை சோதனையிடுவது எனத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. தொகுதிக்கு 50 விழுக்காடுகள் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை சோதனையிட்டால், கூடுதலாக ஆறு நாட்கள் வரை பிடிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியானால், வாக்கு எண்ணிக்கைக்கு (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு பதிலாக, ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களைக் கொண்டு எண்ணலாம். என்னை பொருத்தமட்டில் வாக்கு எண்ணும் பணியை EVM கடினமாக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.

முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் ஆணையத்தை தாக்கிப் பேசிய ஆந்திர முதலமைச்சர், "தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சத்தோடு, அரசுக்குச் சாதகமாக செயல்பட்டு வருகிறது" எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details