ஆந்திராவில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பக்கோரியும் அலுவலகங்களில் ஊழியர்கள் நூறு சதவீதம் பதிவோடு இயங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு மாதங்கள் ஊரடங்கை தொடர்ந்து தலைமை செயலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.
கடந்த வாரம் திறக்கப்பட்ட தலைமை செயலகத்தில் அதிகமான ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் தற்போது மற்றோருவருக்கும் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் புதிதாக 141 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்த எண்ணிக்கை 4,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் மூன்று நபர்கள் மரணித்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.