ஆந்திர காவல் துறை தலைவர் கௌதம் சவாங், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாநிலத்தில் கூடுதலாக 12 திஷா காவல் நிலையங்கள் நாளை (மார்ச்8) தொடங்கப்படும்.
அதாவது 12 மகளிர் காவல் நிலையங்கள் திஷா காவல் நிலையமாக மாற்றப்படும். தற்போதுவரை மாநிலத்தில் ஆறு திஷா காவல் நிலையங்கள் உள்ளன. விசாகப்பட்டினம், திருப்பதியில் தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு ஆந்திர மாநிலத்தை முன்மாதிரியாக மாற்ற இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 51 திஷா வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளன. திஷா காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் அதிகமான புகார்கள் அவர்களின் கணவர் செய்யும் துன்புறுத்தல் குறித்தது.