தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2020, 1:56 PM IST

Updated : Jun 27, 2020, 4:26 PM IST

ETV Bharat / bharat

ஆந்திராவில், மரித்துப் போன மனிதநேயம், முதியவரின் உடல் ஜேசிபி மூலம் அகற்றம்!

அமராவதி: ஆந்திராவில், 72 வயதான முதியவர் ஒருவர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அகற்றி, தகனம் செய்துள்ளனர் நகராட்சி ஊழியர்கள்.

Covid victim's body carried to JCB Andhra Covid victim cremation Udayapuram area of Palasa municipality Chandrababu Naidu ஆந்திரா கோவிட்-19 மரணம் ஜேசிபி உடல் அகற்றம் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன்
Covid victim's body carried to JCB Andhra Covid victim cremation Udayapuram area of Palasa municipality Chandrababu Naidu ஆந்திரா கோவிட்-19 மரணம் ஜேசிபி உடல் அகற்றம் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் உதயம்புரம் தாலுகா பலசா நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 72 வயதான முதியவர் ஒருவர் கரோனாவால் மரணித்தார். மரணத்திற்குப் பின்பே அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து அந்த முதியவரின் உடலை ஜேசிபி இயந்திரம் மூலம் நகராட்சி ஊழியர்கள் தூக்கிச் சென்றனர்.

ஜேசிபி வாகனத்தின் பின்னால் நகராட்சி ஊழியர்கள் முழு கவச பாதுகாப்பு உடை அணிந்து நிற்க, டிரைவர் வண்டியை இயக்கினார். அந்த முதியவரின் உடல், ஜேசிபியின் முன்னால் உள்ள தொட்டியில் கிடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜேசிபி வாகனம் இடுகாட்டுக்குச் சென்றது. அதன்பின்னர் முதியவரின் சிதைக்கு தீ மூட்டி தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து முதியவரின் உறவினர்கள் கூறுகையில், “இது மனிதத் தன்மையற்ற செயல். அவரின் உடலை எடுத்துச் செல்ல எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை” என்று வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான காணொலிக் காட்சியை பகிர்ந்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ட்விட்டரில், “கரோனா வைரஸினால் உயிர் இழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்டு டிராக்டர் அல்லது ஜேசிபி இயந்திரத்தில் ஏற்றப்படுகிறது. மரணத்தின்போது கூட அவர்களுக்கு மரியாதை, கண்ணியம் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலுக்காக ஜெகன் மோகன் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆந்திராவில், மரித்துப் போன மனிதநேயம், முதியவரின் உடல் ஜேசிபி மூலம் அகற்றம்!

இதேபோன்று தொடர்புடைய மற்றொரு சம்பவம், சோம்பேட்டை நகரில் கடந்த 24ஆம் தேதி நடந்துள்ளது. அப்போது கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணித்த பெண் ஒருவரின் சடலம் டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதயம்புரம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மனிதம் எங்கே?' சாத்தான்குளம் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பும் ஹர்பஜன்

Last Updated : Jun 27, 2020, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details