மும்பையில் கனமழை பெய்து வருவதால் நகரின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்குமளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று வெள்ளம் ஏற்பட்ட சாலையில் மஹிந்திரா பொலிரோ காரும், ஜாகுவார் காரும் வெள்ளத்தில் ஊர்ந்து வருவதுபோல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை வைத்து ஒரு தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தியாக வெளியிட்டது.
எதிர்நீச்சல் போட்ட பொலிரோ அந்த செய்தியில், வெள்ளத்தில் ஜாகுவார் கார் சிக்கிக் கொண்டு திணருகிறது, ஆனால் பொலிரோ கார் அசால்ட்டாக வெள்ளத்தை கடந்து செல்கிறது என இரு நிறுவனங்களின் கார்களையும் ஒப்பிட்டிருந்தது.
இதனை கண்ட மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை பகிர்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில், “இதனால் நாங்கள் பெருமையடையவில்லை. ஜாகுவாரையும் பொலிரோவையும் ஒப்பிடுவது சரியல்ல. இதுபோன்ற பகுதிகளில் ஓட்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் பொலிரோ கார். எனக்கு மிகப்பிடித்த கார் என்று பொலிரோவை நான் கூறியதற்கான காரணம் இப்போது உங்களுக்கு தெரிய வந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.