தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 22, 2019, 8:38 PM IST

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் இயங்கும் தனித்துவமான பள்ளி!

திஸ்பூர்: பல்வேறு விதமான செயல்பாடுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் பள்ளி ஒன்று அஸ்ஸாம் மாநிலத்தில் இயங்கிவருகிறது.

Assam

அஸ்ஸாம் மாநிலம் மோரிகவுன் மாவட்டத்தில் தனித்துவமான பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. குனுத்துரான் மாடல் என்னும் பிரத்யேகமான முறை இந்த பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த கவுசிக் தேப்நாத் என்ற ஆசிரியர் இந்த திட்டத்தை வகுத்துள்ளார்.

மாணவர்களுக்கு புத்தகத்தை வைத்து மட்டும் கற்றுதராமல், உயற்பயிற்சி, அறிவியல் பூர்வமான கல்வி, வங்கி, விளையாட்டு, சுற்றுசூழல் என பல்வேறுவிதமான துறைகளைப் பற்றி செயல்பாடுகள் மூலம் கற்று தரப்படுகிறது. மாணவர்களை ஈர்க்கும் வகையில் பள்ளியில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கியின் அடிப்படையை கற்று தருவதற்கு ஒரு சிறு வங்கியே அங்கு நிறுவப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் பணத்தை அங்கு சேமித்துக் கொள்ளலாம்.

Assam Special School

பள்ளியில் அமைச்சரவையும் செயல்பட்டுவருகிறது. பள்ளி சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அங்கு செயல்படுகிறது. மாணவர்கள் வீட்டுப்பாடத்தை செய்கிறார்களா என்பதை கல்வித்துறை அமைச்சகம் கண்காணிக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பெண் அமைச்சர்கள் கொண்டு குழு ஒன்று பள்ளியில் இயங்குகிறது. அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் பதவிகாலம் ஏழு நாட்கள் ஆகும். இதன் மூலம், மாணவர்களின் கல்வியறிவு மேம்படுகிறது.

இதையும் படிங்க:

அரசியலமைப்பில் முக்கிய பங்காற்றிய சின்ஹா யார்?

ABOUT THE AUTHOR

...view details