நடைபெற்று முடிந்த மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக கடும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுவில் இணைந்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்த படி டிடிவி தினகரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
புதுச்சேரி அமமுக நிர்வாகிகள் கட்சியலிருந்து விலகல்! - resign
புதுச்சேரி: வேல்முருகனை மீண்டும் அமமுக மாநிலச் செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி, புதுச்சேரி மாநில அமமுக செயலாளராக இருந்த வேல்முருகனையே அக்கட்சி தலைமை மீண்டும் மாநிலச் செயலாளராக நியமித்துள்ளது. தலைமையின் இச்செயலுக்கு புதுச்சேரி அமமுக நிர்வாகிகளுடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் புதுச்சேரியில் போட்டியிட்ட தமிழ்மாறன், வேல்முருகனை மீண்டும் மாநிலச் செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவருடன் சேர்ந்து கட்சி நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.