தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் எதற்காக பிரிப்பு? - அமித் ஷா விளக்கம்

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தவே அம்மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது என அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

AMIT SHAH SPEECH ON RAJYA SABHA

By

Published : Aug 5, 2019, 7:34 PM IST

காஷ்மீர் சிறப்புத் தகுதியை ரத்து செய்யும் மசோதாவை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்நிலையில் மாநிலங்களவையில் இம்மசோதா மீதான விவாதத்தின்போது,

  • ஜம்மு-காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றியது ஏன்?
  • எத்தனை காலத்துக்கு யூனியன் பிரதேசமாக தொடரும்? என ப. சிதம்பரம் உள்பட பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை என்றும், ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்பட்டவுடன் அது மீண்டும் மாநில அந்தஸ்தைப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details