பன்குரா: மேற்கு வங்கம் மாநிலத்துக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு பழங்குடியினர் வீட்டில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
பழங்குடியினர் வீட்டில் உணவருந்திய அமித்ஷா! - பழங்குடியினர் வீட்டில் மதிய உணவு
பாஜக வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்கம் மாநிலம் சென்றுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு பழங்குடியினர் வீட்டில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
மேற்கு வங்கம் மாநிலம் பன்குரா மாவட்டம் ஜங்கல்மஹால் பகுதியில், பாஜக வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று (நவம்பர் 5) நடைபெற உள்ளது. இதற்காக, தனி விமானம் மூலம் அமித்ஷா இன்று பன்குரா மாவட்டத்துக்கு சென்றார்.
அங்கு, பழங்குடியினர் வீட்டில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார். அவருடன் மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளும் உணவு அருந்தனர். அதைத் தொடர்ந்து, அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து அகதிகளாக வந்தவர்களின் வீடுகளிலும் அமித்ஷா உணவு அருந்துவார் என்று அம்மாநில பாஜவினர் தெரிவித்துள்ளனர்.