தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகலுக்கு மோடிதான் காரணம்' - சித்தராமையா - ராஜினாமா

பெங்களூரு: "கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம்" என்று, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

சித்தராமையா

By

Published : Jul 2, 2019, 11:29 PM IST

கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனந்த் சிங், ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் தங்களின் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் பாஜகவில் இணைவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "அனந்த் சிங், ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் பதவி விலகியதற்கு காரணம் மோடி, அமித் ஷா. பாஜகவினர் பணம், பதவி தருவதாக மிரட்டி வருகின்றனர். இந்த அரசை கவிழ்க்க அவர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்காது. கர்நாடக அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை. பதவி விலகிய இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைய மாட்டார்கள்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details