தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா: உலக நாடுகளுக்கு அமித் ஷா நன்றி! - உலக நாடுகளுக்கு அமித்ஷா நன்றி

டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பு நாடாக தேர்தெடுக்கப்பட்டதற்கு உலக நாடுகளுக்கு உள்த்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Amit Shah expresses gratitude over India's election as UNSC non-permanent member
Amit Shah expresses gratitude over India's election as UNSC non-permanent member

By

Published : Jun 18, 2020, 2:18 PM IST

டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உலக நாடுகளுக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

ஐநா சபையின் சக்திவாய்ந்த அமைப்பாகக் கருதப்படும் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும், 10 நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது.

இந்தத் தற்காலிக உறுப்பினர் நாடுகளுக்காக ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள் மூன்றில் இரண்டு விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது, 193 நாடுகளில், 128 நாடுகளின் வாக்குகளைப் பெற வேண்டும்.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடான இந்தியா தற்காலிக உறுப்பு நாடாக போட்டியிட்டது. இதில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 55 நாடுகள் உள்பட 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்ததால், இந்தத் தேர்தலில் இந்தியா ஏகமனதாக வெற்றிபெற்றது. இது பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா தேர்வாகும் எட்டாவது முறையாகும். இதையடுத்து, இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வரும் ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் செயல்படும்.

இது குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியாவை தற்காலிக உறுப்பினர் நாடாக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி.

இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான, தொலைநோக்குத் தலைமையின்கீழ் ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற வாக்கியத்தை நிலைநிறுத்தி உலகின் அமைதி, வளர்ச்சிக்காக இந்தியா செயல்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க...ஆயுதமின்றி இந்திய வீரர்களை அனுப்பியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details