தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அமேசான் தீ விபத்து மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது' - ஹாலிவுட் நடிகர் அதிருப்தி - மேசான் மழைகாடுகளில் பரவி வரும் காட்டுத்தீ

பிரேசில்: அமேசானில் ஏற்பட்டிருக்கும் தீவிபத்து மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் லியார்னடோ டிக்காப்ரியோ தனது அதிருப்தியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அமேசான் தீவிபத்து

By

Published : Aug 23, 2019, 11:42 AM IST

கடந்த சில தினங்களாக அமேசான் மழைகாடுகளில் பரவிவரும் காட்டுத்தீயால், அங்கு மிகுந்த சேதம் ஏற்பட்டுவருகிறது. இந்த வருடம் வரலாறு காணாத அளவில் அமேசானில் சுமார் 9000-த்திற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவமானது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 விழுக்காடு, காட்டுத் தீயின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியிருக்கிறது. மேலும் 99 விழுக்காடு தீ விபத்து, மனிதர்களால்தான் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கப்படுகிறது என அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா (NASA) எனப்படும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது, அமேசான் காட்டுத் தீ புகைப்படத்தை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டது.

நாசாவின் ட்விட்டர் பதிவு

மேலும், பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் மழைக்காடுகள், 20 விழுக்காடு பூமியின் பிராணவாயுவை உற்பத்தி செய்கின்றன. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு எனப்படும் அமேசானில் ஏற்பட்டிருக்கும் இத்தீவிபத்து மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகன் லியார்னடோ டிக்காப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

லியார்னடோ டிக்காப்ரியோவின் ட்விட்டர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details