2019ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட் கை கடிகாரத்தில் விலை அப்போது 6,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய பயனர்களை ஈர்க்கவும், புதிய தகவல் சாதனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.
விலை தளர்வுடன் இந்திய தகவல் சாதன சந்தைக்கு மறுபிரவேசம் எடுக்கும் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட்
டெல்லி: ஸ்மார்ட் கைகடிகாரமாக அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட்டை ஹூவாமி நிறுவனம் 4,999 ரூபாய்க்கு இந்திய தகவல் சந்தையில் மறு அறிமுகம் செய்துள்ளது.
amazfit verge lite
1.3 அங்குல அமோலெட் தொடுதிரை, இதயத் துடிப்பு உணரிகள், செயல்பாடுகள் கண்காணிப்பு, நீர் பாதுகாப்பு, ப்ளூ டூத் 4.0 ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
ஜூன் மாதம் இந்தியாவில் அமேஸ்ஃப்பிட் ஸ்ட்றாடோஸ் 3 எனும் அதிதிறன் கொண்ட, இரண்டு சிப்புகள், இரண்டு இயங்குதளங்கள் கொண்ட ஸ்மார்ட் கை கடிகாரத்தை ஹூவாமி நிறுவனம் 13,999 ரூபாய் மதிப்பில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சாதனத்தின் மின்கல சேமிப்புத் திறன் 14 நாட்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Last Updated : Jul 17, 2020, 3:48 PM IST