காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (ஆக.24) நடைபெற உள்ள நிலையில், கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.
இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா பதவி வகித்து வந்தார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். மேலும், காந்தி - நேரு குடும்பத்திலிருந்து யாரும் தலைமைக்கு மீண்டும் வரக்கூடாது என கோரிக்கையும் எழுந்தது.
இதனிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைவராக வரவேண்டும் என்று ஒரு சில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.