ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டியில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ’ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவனம்’. சென்னை, லக்னோ, கொச்சி, மும்பை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
’ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவனம்’ புதிய சாதனை - சாதனை
சித்தூர்: ’ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவனம்’ தனது 100ஆவது ரயிலை வெற்றிகரமாகத் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
மிகவும் புகழ்பெற்ற ’ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவனம்’ தற்போது 100ஆவது மெட்ரோ ரயிலைத் தயாரித்துள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் கார்பரேஷனுக்காக தயாரித்துள்ள இந்த ரயிலை ‘ஆல்ஸ்டோம் இந்தியா’ நிறுவனத்தின் மேலாளர் ஆலன் ஸ்பர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘ஆல்ஸ்டோம் நிறுவனம் 100ஆவது ரயிலைத் தயாரித்திருப்பது மகிழ்ச்சி. ’ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவனம்’ உலகத்தரமான ரயில்களைத் தயாரிக்கிறது என எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் எதிர்காலத்தை வெளிச்சமாக்க எங்களது நிறுவனத்தின் மூலம் செயல்படுவது மிகவும் பெருமைக்குரியது’ என்றார்.