தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை -அரவிந்த் கெஜ்ரிவால் - கூட்டணி

டெல்லி: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இல்லை

By

Published : Mar 20, 2019, 8:28 AM IST

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமைய உதவி வருவதாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக தங்களுடன் கூட்டணி இல்லை என அறிவிட்டது எனவும், ஆனாலும் ஊடகத்தில் வரும் செய்திகள் யாவும் காங்கிரஸ் தலைவர்களால் அரசியல் ஆதாயத்திற்காக செய்பவை எனக் கூறியுள்ளார்.

முன்னதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியை மறுத்து வந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், சக்கோ ஆகியோர் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என காங்கிரஸ் சேசிய தலைவர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.

2014ஆம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக டெல்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details