தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக் கொள்கை சாத்தியமில்லை - நாராயணசாமி

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை சாத்தியமில்லை என்றும், இது தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம்

By

Published : Aug 5, 2019, 9:30 AM IST

புதிய கல்விக் கொள்கை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரியில் அனைத்து கட்சி தலைவர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் , கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி அனைத்து கட்சி கூட்டம்

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களிலும்புதிய கல்விக் கொள்கைசாத்தியமில்லை என்றும், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றும் புதுச்சேரியில் சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details