நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இந்த வாரம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி, அர்ஜுன் மேக்வால், வி.முரளிதரன் ஆகியோரும் பங்கேற்றனர்.