டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டத்தினையும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டினர்.
இதற்கு பதலளிக்கும் வகையில், மக்களிடையே பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டத்தினை செய்துவருவதாகவும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வி தரத்தினை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டில் உள்ள மூத்த மகன் போண்று யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.